ETV Bharat / state

ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட விவரங்களை அறிய அரசின் 'சம்பல்' செயலியை பதிவிறக்கம் செய்க! - அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி

ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பான விவரங்களை அறிய, 'சம்பல்' மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Ariyalur
Ariyalur
author img

By

Published : Feb 26, 2023, 2:31 PM IST

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தேசிய சமூக உதவித் திட்டம் (NSAP) என்பது, இந்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு நலத்திட்டம். இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள முதியோர், விதவை மற்றும் ஊனமுற்றோர் போன்ற ஏழைக் குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது.

'சம்பல்' (SAMBAL) மொபைல் செயலி, தேசிய தகவலியல் மையத்தால் (NIC) உருவாக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிகள், ஓய்வூதியம் பெற பதிவு செய்வது, நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து அறிந்து கொள்ள இந்த செயலி உதவுகிறது.

ஓய்வூதியம் பெறுபவர்களின் பட்டியல், நேரடிப் பயன் பரிமாற்றம் (Direct Benefit Transfer) குறித்த விவரம், மற்றும் தங்களுக்கு அருகில் உள்ள வங்கி மற்றும் தபால் நிலையங்கள் குறித்த விவரங்களை அறிய உதவியாக உள்ளது. எனவே, தேவையானவர்கள் கூகுள் பிளே ஸ்டோரில், சம்பல் மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்பெறும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சிறப்பு குறைதீர் கூட்டம்: மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வரும் 28ஆம் தேதி பிற்பகல் 4.00 மணி அளவில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அரியலூர் கோட்டாட்சியரிடம் நேரடியாக அளிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் முகம் மட்டும் தெரியும்படியான வண்ண புகைப்படம் ஆகியவற்றுடன் மனுக்களை வழங்கி பயன்பெற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சிபில் ஸ்கோர் குறைந்தால் இதைச் செய்யுங்க.. சூப்பர் டிப்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.