அரியலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிவோர், அலுவலகத்திற்கு வருகை புரிவோர் அனைவரும் கைகளைக் கழுவிய பின்னரே அலுவலகத்திற்குள் வர வேண்டும் என ஆட்சியர் ரத்னா உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிதாக கை கழுவும் இடத்தையும் மாவட்ட ஆட்சியர் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியினை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: கோவிட்-19 முன்னெச்சரிக்கை: கை கழுவும் பழக்கத்தை தொடங்குங்கள்