கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் ரத்னா, காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
அந்த வகையில் அம்மாவட்ட எல்லைக்குள் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி, அதில் அனுமதிக்கப்பட்ட நபர்களைவிட கூடுதலாக யாராவது செல்கிறார்களா என சோதனை செய்யப்படுகிறது. அதேபோல் அம்மாவட்ட எல்லைக்குள் வரும் லாரிகளில் அதிக நபர்கள் இருந்தால் அவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்கின்றனர்.
அதுமட்டுமின்றி மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றன. மேலும் சந்தேகத்திற்கு உள்ளாகும் நபர்களுக்கு ஸ்கேனர் கருவி மூலம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க: ஊறல் போட்டிருந்த 110 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்