அரியலூர் மாவட்டத்தில் அனைத்து விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதில் 2020ஆம் ஆண்டு மத்திய அரசால் இயற்றப்பட்ட அவசரச் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் இச்சட்டங்களை திரும்பப் பெறக் கோரி வருகிற ஜூலை 27-ஆம் தேதி அன்று அனைத்து கிராமங்களிலும் உள்ள விவசாயிகள் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பைக் காட்டுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் கையெழுத்து இயக்கத்தை வரும் 20ஆம் தேதி நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் இளங் கீரன், இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் ராஜேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், 16 பாசன வாய்க்கால் விவசாய சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.