ETV Bharat / state

மக்காச்சோளப் பயிர்களை ஆய்வு செய்த வேளாண் துறை இயக்குநர் - agriculture director inspected ariyalur fields

அரியலூர்: வேளாண்மை துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி தாமரைகுளம், ஓட்டக்கோவில், அம்மா குளம் உள்ளிட்ட இடங்களில் மக்காசோளம், நிலக்கடலை பயிர்களை ஆய்வு செய்தார்.

agriculture-director-inspects-ariyalur-corn-fields

author img

By

Published : Oct 13, 2020, 7:23 PM IST

Updated : Oct 13, 2020, 7:35 PM IST

வேளாண்மை துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி அரியலூர் மாவட்டத்தில் தாமரைகுளம், ஓட்டக்கோவில், அம்மா குளம் உள்ளிட்ட இடங்களில் மக்காச்சோளம், கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ள இடங்களை ஆய்வு செய்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "நூறு நாள் வேலைத் திட்டத்தை விவசாய பணிகளுக்கு ஈடுபடுத்துவது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சம்பா சாகுபடி பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. 43 லட்சம் ஹெக்டேரில் 50 விழுக்காடு தற்போது சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 80 விழுக்காடும், தஞ்சாவூரில் 50 விழுக்காடும் சம்பா நடவு பணிகள் நிறைவுற்றது.

மக்காச்சோளப் பயிர்களை ஆய்வு செய்த வேளாண் துறை இயக்குநர்

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தவும், சம்பா நெல்லை தாக்குவதை கட்டுப்படுத்தவும் அரசு அலுவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு விவசாயிகளை ஊக்கப்படுத்தி உதவ வேண்டும். மகசூல் குறையாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ரத்னா, வேளாண்மை இயக்குநர் உள்ளிட்ட வேளாண் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க... அரியலூரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் திறப்பு

Last Updated : Oct 13, 2020, 7:35 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.