ETV Bharat / state

கட்டுப்பாட்டை இழந்த லாரி... லாவகமாக உயிர் தப்பிய ஓட்டுநர் - கரும்பு ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

அரியலூர்: ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே கரும்பு ஏற்றி வந்த லாரி வேகத்தடையைக் கடக்க முயன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளானது.

lorry
lorry
author img

By

Published : May 5, 2020, 10:30 PM IST

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடியில் இருந்து அரியலூர் மாவட்டம், சாத்தமங்கலம் பகுதியில் இருக்கும் சர்க்கரை ஆலைக்கு லாரி ஒன்று கரும்புகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது, ஜெயங்கொண்டம் பகுதியில் அண்ணா சிலை வளைவு அருகே உள்ள வேகத்தடையில் மெதுவாக ஓட்டுநர் இயக்கும் பொழுது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கரும்பு ஏற்றிச் சென்ற லாரி கவிழும் காட்சி

இதில், சாத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சதாசிவமும், அவரது உதவியாளரும் லாரியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டனர். இதனால், சிதம்பரம் - ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.

இதையும் படிங்க: டிக்-டாக் செயலி மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய மதுரை இளைஞர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.