அரியலூர் மாவட்டம் ஆணந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் கொத்தனார் வேலை செய்துவருகிறார். இவர் செந்துறையில் இருந்து வீட்டிற்கு காய்கறி வாங்கிக் கொண்டு இராயம்புரம் வழியாக ஆணந்தவாடி சென்றார். அப்போது இராயம்புரம் வளைவில் ஆம்னி கார் இருசக்கர வாகனத்தில் மோதியதில் பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து செந்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.