அரியலூர் மாவட்டத்தில் மேல கருப்பூர், அம்பலூர் கட்டளை, காசான்கோட்டை, அணைக்கரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்து ஏழு பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதில் ஆறு பேர் ஆண்கள், ஒருவர் பெண். இவர்கள் ஏழு பேரும் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 15 பேர், தஞ்சை அரசு கல்லூரி மருத்துவமனையில் இரண்டு பேர், சென்னையில் ஒருவர் என அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மொத்தம் 18 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மொத்தம் பாதிக்கப்பட்டுள்ள 407 பேரில், 389 நபர்கள் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளனர்.