அரியலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கோட்டாச்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கோட்டாச்சியர் பாலாஜி, நகராட்சி ஆணையர் குமரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரியலூர் மாவட்ட வியாபாரிகள் கலந்துகொண்டனர்.
அதில், வியாபாரிகள் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாளை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) முதல் 7 நாள்கள் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்போவதாகத் தெரிவித்தனர். அதன்படி நாளை முதல் 7 நாள்களுக்கு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் அத்தியாவசியப் பொருள்கள் கடைகளான பால், மருந்தகம், காய்கறிக் கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்'- மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!