அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ். இவருடைய நண்பர்களான கலியமூர்த்தி, காசிநாதன், சந்திரசேகரன் ஆகியோருக்குச் சொந்தமான 260 செம்மறி ஆடுகளை நேற்று (மே 22) இரவு கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் இருந்து சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் தேவாமங்கலத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.
சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணி நடைபெற்று வரும் நிலையில், அந்த வழியாக ஆடுகளை அழைத்து வந்துள்ளனர்.
அப்போது, மீன்சுருட்டி அருகே வெண்ணங்குழி என்ற இடத்தில் ஆடுகளை நாய் துரத்தியதால் திடீரென ஆடுகள் புதிய தார்சாலை பகுதிக்கு சென்றன. உரிமையாளர் காமராஜ் அவரது நண்பர் சந்திரசேகரன் இருவரும் ஆடுகளை மேடான பகுதிக்கு வரவழைக்க முயன்றனர். அதற்குள் பின்னால் வந்த கார் வேகமாக இவர்கள் மீது மோதியதில் காமராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே கார் மோதியதில் 50 செம்மறி ஆடுகளும் உயிரிழந்தன.
இதைத் தொடர்ந்து சந்திரசேகரன் மற்றும் கார் ஓட்டுநர் சங்கர் இருவரும் லேசான காயத்துடன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். உயிரிழந்த காமராஜின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் 27 பூச்சிக்கொல்லிகளுக்கு தடை!