அரியலூர் மாவட்டம் நாச்சியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திக், சுப்பிரமணி, அலெக்ஸ் பாண்டியன், அண்ணாதுரை ஆகியோர் வனவிலங்குகளை வேட்டையாடி வில்லேஜ் ஹன்டர் (Village Hunter) என்ற பெயரில் யூ ட்யூப் சேனலில் சுவாரசியமாக காணொலி வெளியிட்டு வந்துள்ளனர்.
இந்தக் காணொலிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வனவிலங்குகளை வேட்டையாடுவது மட்டுமின்றி அங்கேயே எப்படி சமைத்து சாப்பிட வேண்டும் என்பதையும் செய்துகாட்டுகின்றனர்.
இந்தத் தகவலறிந்த வனத் துறையினர் நான்கு பேரையும் கைது செய்தனர். இவர்கள் முயல், புனுகு பூனை, உடும்பு, கெளதாரி, புறா ஆகிய வனவிலங்குகளை வேட்டையாடி யூ ட்யூப் மூலம் மாதம் ஒன்னரை லட்சம் சம்பாதித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள், நான்கு செல்லிடப்பேசிகள், நவீன ரக ஆப்பிள் கணினி, டிஜிட்டல் கேமரா ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: தலைமை ஆசிரியர் வீட்டில் 66 சவரன் தங்கநகை திருட்டு!