கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் தீவிரம் அறியாத, அரியலூர் மாவட்டம் உஞ்சினி கிராம மக்கள் கூட்டமாக வயல் வேலைக்குச் சென்றுவருகின்றனர். இதனை அக்கிராம நிர்வாகிகள் கடுமையாகக் கண்டித்தனர்.
அப்போது, பொதுமக்களிடம் பேசிய கிராம பொறுப்பாளர், "கரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இந்நிலையில் கூட்டமாக வயல் வேலைக்குச் செல்பவர்களைக் கணக்கெடுத்து, அவர்களுக்கு 100 நாள் வேலை தரமாட்டோம்.
அவசியமின்றி இளைஞர்கள் இரண்டு பேர், அதற்கும் மேற்பட்டோர் சேர்ந்து இருசக்கர வாகனங்களில் சுற்றக்கூடாது. ஊரில் உள்ள வேப்பமரத்தடி, ஆலமரத்தடிகளில் கூடி நின்று, அமர்ந்து பேசக்கூடாது.
அவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும்போது காவல் துறையினர் கைதுசெய்தால், கிராம நிர்வாகத்தினரை உதவிக்கு அழைத்தால் வர மாட்டோம். அனைவரும் அவரவர் வீடுகளிளேயே இருங்கள்" என்றார்.
இதையும் படிங்க: கரோனாவை ஒழிக்க வீடு தேடிச்சென்று மாட்டுச் சாணம், கோமியம் வழங்கும் விவசாயி