ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32ஆவது ஒலிம்பிக் போட்டிகள் நேற்றுடன் (ஆகஸ்ட்.08) முடிவடைந்தது. இந்த போட்டியில் இந்தியா உள்பட பல நாடுகளிலிருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
இதில் அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலத்துடன் மொத்தம் 113 பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலத்துடன் மொத்தம் 88 பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடமும், 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலத்துடன் மொத்தம் 58 பதக்கங்களுடன் ஜப்பான் 3ஆவது இடத்தில் உள்ளது.
இதில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலத்துடன் மொத்தம் 7 பதக்கங்களுடன் 48ஆவது இடத்தில் உள்ளது. இந்தியா 124 போட்டியாளர்கள் உள்பட 228 பேர் அடங்கிய குழுவை ஒலிம்பிக் போட்டியில் அனுப்பியது.
இந்நிலையில், பதக்கம் வென்ற இந்தியர்களை இந்திய அமெரிக்க தூதரகம் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது. அதில், "ஒலிம்பிக் போட்டிகள் உலகை ஒன்றிணைக்கிறது. உங்களின் அற்புதமான செயல்திறனால் ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்று இருக்கிறீர்கள். டீம் இந்தியாவிற்கு வாழ்த்துகள்.
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து இரண்டு ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற இந்தியாவின் முதல் வீராங்கனை. டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டிற்காக விளையாட விரும்பும் கோடிக்கணக்கானவர்களுக்கு நீங்கள் ஒரு முன்மாதிரி.
பளு தூக்கு வீராங்கனை மீராபாய் சானு ஒலிம்பிக் போட்டியின் முதல் நாளில் வெள்ளி பதக்கம் வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளீர்கள். இது இந்திய வரலாற்றில் முக்கியமான நாள். நீங்கள் இந்திய மக்களுக்கு ஒரு உத்வேகம்.
ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை நினைத்து இந்திய மக்கள் பெருமை அடைந்திருக்கிறார்கள்.
வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் லவ்லினா ஒலிம்பிக்கில் அறிமுகமான குத்துச்சண்டை போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளீர்கள். நீங்கள் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள். வாழ்த்துகள்” என பதிவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் - பதக்கம் வென்ற இந்திய நட்சத்திரங்கள்