டோக்கியோ: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெறும் இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆடவர் காம்பவுண்ட் வில்வித்தைக் காலிறுதிப் போட்டி இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய வீரர் ராகேஷ் குமார், சீனாவின் ஐ சின்லியாங் உடன் மோதினார்.
இரண்டு புள்ளிகளில் தோல்வி
மொத்தமுள்ள ஐந்து சுற்றிலும் ராகேஷ் குமார், சீன வீரருடன் கடினமாக போராடினார். போட்டி முடிவில் ராகேஷ் 143 புள்ளிகளையும், சின்லியாங் 145 புள்ளிகளையும் பெற்றனர். இதன்மூலம், ராகேஷ் குமார் காலிறுதி சுற்றோடு வெளியேறியுள்ளார்.
முன்னதாக நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 8 சுற்றில், ஸ்லோவேக்கியா வீரர் மரியன் மரெகாக்கை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 28ஆவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: PARALYMPIC SHOOTING: சீறினார் சிங்ராஜ்; வென்றார் வெண்கலம்!