ETV Bharat / sports

TOKYO OLYMPICS: அரையிறுதியில் தீபக் புனியா ஏமாற்றம்; வெண்கலம் கிடைக்குமா? - டோக்கியோ ஒலிம்பி

ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் இந்தியாவின் பதக்க நம்பிக்கையாக விளங்கிய தீபக் புனியா, அரையிறுதிப் போட்டியில் அமெரிக்க வீரரிடம் தோல்வியடைந்தார்.

தீபக் புனியா, Deepak Punia
Wrestler Deepak Punia loses semi-final bout to David Taylor
author img

By

Published : Aug 4, 2021, 4:53 PM IST

டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் மல்யுத்தம் ஆடவர் ஃப்ரீ-ஸ்டைல் 86 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதிப் போட்டிகள் இன்று (ஆக.4) நடைபெற்றன. இதில், இந்தியாவின் தீபக் புனியா, அமெரிக்க வீரர் டேவிட் டெய்லர் உடன் மோதினார். இதற்கு முன், தீபக் புனியா காலிறுதிப் போட்டியில் சீன வீரரை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.

ஆதிக்கத்தால் வீழ்ச்சி

இந்நிலையில், அரையிறுதிப் போட்டியின் ஆரம்பம் முதலே புனியா மீது ஆதிக்கம் செலுத்திய டெய்லர் மிக எளிதாக போட்டியை வென்றார். அரையிறுதியில் தோல்வியுற்ற தீபக் புனியா வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்பார்.

இறுதிப்போட்டியில் ரவிக்குமார்

இதற்கு முன்னர் நடைபெற்ற ஆடவர் மல்யுத்தம் ஃப்ரீ-ஸ்டைல் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா இறுதிப்போட்டிக்கு முன்னேறி இந்தியாவிற்கு அடுத்த பதக்கத்தை உறுதிச்செய்துள்ளார்.

ரவிக்குமார் விளையாடும் இறுதிப்போட்டி நாளை (ஆக.4) நடக்க இருக்கிறது. ரவிக்குமார், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் சுஷில்குமாருக்கு அடுத்து மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: ஈட்டி எறிதல் - இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நீரஜ் சோப்ரா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.