டோக்கியோ : மகளிர் 57 கிலோ பிரிவு மல்யுத்த போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக், ரஷ்யாவின் வளரியா கோப்லோவா சந்தித்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் வெண்கல போட்டிக்கான ஆட்டத்திற்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் அன்ஷு மாலிக் மோதினர்.
முதல் மூன்று நிமிடத்தில் டெக்னிக்கல் முறையில் ரஷ்ய வீராங்கனை ஒரு புள்ளி பெற்று முன்னிலை வகித்தார்.
அடுத்த மூன்று நிமிடத்தில் அற்புதமாக விளையாடிய அன்ஷு மாலிக் டெக்னிக்கல் முறையில் ஒரு புள்ளி பெற்றார்.
இறுதியில் ஒன்றுக்கு 5 என்ற புள்ளிக்கணக்கில் அன்ஷு மாலிக் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
இதையும் படிங்க : 40 வருட தவம்: ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலம் வென்றது இந்தியா