200 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் 23.85 வினாடிகளில் ஏழாவது நபராக தொடரை முடித்த அவர், அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறத் தவறினார். 22.11 வினாடிகளில் தொடரை முடித்து கிரிஸ்டின் ம்போமா முதலிடம் பிடித்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த கப்ரியேல் தாமஸ் 22.20 வினாடிகளில் தொடரை முடித்து இரண்டாம் இடம் பிடித்தார். தொடரை முடித்த முதல் மூன்று நபர்கள் அரையிறுத்திச் சுற்றுக்கு தகுதிபெற்றனர்.
முன்னதாக 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் அரையிறுதிச் சுற்றுக்கு ட்யூட்டி தகுதிபெறாமல் தோல்வியைத் தழுவினார்.
இதையும் படிங்க: ஒலிம்பிக்: அரையிறுதிக்கு முன்னேறி இந்திய மகளிர் ஹாக்கி அணி வரலாற்றுச் சாதனை!