ஒலிம்பிக் தொடரின் 14ஆம் நாளான இன்று (ஆக. 5) இந்திய வீரர்கள் மல்யுத்தம், ஆடவர் ஹாக்கி அணி உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றுவருன்றனர். அதில், மகளிருக்கான 56 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில், இந்தியாவின் மின்னல் வேக வீராங்கனை வினேஷ் போகத் பங்கேற்றுவருகிறார். இது இவருக்கு முதல் ஒலிம்பிக் போட்டியாகும்.
இதனிடையே, காலிறுதிக்கான தகுதிச் சுற்றில், ஸ்வீடன் நாட்டின் மூத்த மல்யுத்த வீராங்கனையான சோபியா மக்டலேனா மாட்சனுடன் மோதினார். ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இறுதியில் 7-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று அசத்தினார். போட்டியின்போது போகத்துக்கு சிறிய காயம் ஏற்பட்டது. இருப்பினும் வெற்றியைப் பதிவுசெய்து நம்பிக்கை அளித்துள்ளார்.
இதையும் படிங்க: Tokyo Olympics 14ஆவது நாள்: இந்தியாவிற்கான முக்கிய போட்டிகள்!