டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் ஆடவர் ஹாக்கி காலிறுதிப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் இன்று (ஆக்.1) மோதின. இந்திய அணிக்கு தில்பீரீத் சிங் ஏழாவது நிமிடத்திலும், குர்ஜந்த் சிங் 16ஆவது நிமிடத்திலும் கோல் அடித்து முன்னிலையைப் பெற்றுத் தந்தனர். இதனிடையே, இங்கிலாந்து அணி 45ஆவது நிமிடத்தில் கோல் அடித்தது.
இதன்பின், இங்கிலாந்து அணி கோல் அடிக்க பலமுறை முயன்றது. இருப்பினும், இந்தியா அணி தடுப்பாட்டத்தால், இங்கிலாந்து ஒரு பெனால்டி வாய்ப்பைக்கூட வீணடித்தது, ஆட்டத்தின் முடிவில் (57ஆவது நிமிடத்தில்) இந்திய வீரர் ஹர்திக் சிங் கோல் அடிக்க, இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
அரையிறுதியில் பெல்ஜியம்
அரையிறுதியில் இந்திய அணி பெல்ஜியத்தை சந்திக்க இருக்கிறது. 1980 மாஸ்கோ ஒலிம்பிக் தொடருக்கு பின் ஏறத்தாழ 41 ஆண்டுகளுக்கு பின் இந்தியா ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதிப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வென்றார் சிந்து; இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்