டோக்கியோ : டோக்கியோ ஒலிம்பிக்கின் 7ஆவது நாளான இன்று (ஜூலை 29) 91 கிலோ எடைக்கு அதிகமான குத்துச்சண்டை பிரிவில் 32 வயதான இந்திய வீரர் சதீஷ் குமார் ஜமைக்கா வீரர் ரிக்கார்டோ பிரவுன் (Ricardo Brown )-ஐ எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியில் அவருக்கு 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி கிடைத்தது. தொடர்ந்து, காலிறுதிக்கு முன்னேறினார். சதீஷ் குமார் ஏற்கனவே இருமுறை ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கமும், பல முறை தேசிய பதக்கங்களும் வென்றுள்ளார்.
இது தவிர 2018ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றிருந்தார். சதீஷ் பொதுவாக வலக்கையால் அதிகம் செயல்படக் கூடியவர். சதீசை எதிர்த்து களம் கண்ட 31 வயதான ஜமைக்கா வீரர் ரிக்கார்டோ பிரவுன் (Ricardo Brown ) 1996 ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு அந்நாடு சார்பாக களம் கண்ட முதல் குத்துச்சண்டை வீரர் ஆவார்.
இவர் கனடாவில் சாறு (Juice) கடை ஒன்றையும் நடத்திவந்தார். இந்தச் சாறில் கஞ்சா கலப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பிரவுன் 2014ஆம் ஆண்டு வரை சமையல்காரராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்கும் இந்திய போட்டியாளர்கள் பெயர் பட்டியல்