ETV Bharat / sports

ஒலிம்பிக் ஹாக்கி- ஸ்பெயினை வீழ்த்திய இந்தியா - டோக்கியோ ஒலிம்பிக்

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி , ஸ்பெயினை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

Tokyo Olympics, Day 5: Rupinderpal Singh shines as India thrash Spain 3-0 in Hockey
ஒலிம்பிக் ஹாக்கி- ஸ்பெயினை வீழ்த்திய இந்தியா!
author img

By

Published : Jul 27, 2021, 8:50 AM IST

Updated : Jul 27, 2021, 11:10 AM IST

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஹாக்கி விளையாட்டில் குரூப் ஏ-பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, ஸ்பெயின் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது.

ரூபிந்தர் பால் சிங் மற்றும் சிம்ரஞ்சீத் சிங் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிம்ரஞ்சீத் சிங் ஆட்டத்தின் 13 நிமிடத்தில் ஒரு கோல் அடித்து கோல் எண்ணிக்கை தொடங்கிவைத்தார். 15ஆவது நிமிடத்தில் பெனால்டி ஷாட் கிடைக்க அதை சிறப்பாக பயன்படுத்தி கோலாக மாற்றினார் ரூபிந்தர் பால் சிங். இந்த இரண்டு கோல்கால் முதல் பாதி ஆட்டத்தில், இந்திய 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் 51ஆவது நிமிடத்தில் ரூபிந்தர் பால் சிங் மற்றொரு கோலை அடிக்க இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை ருசித்தது.

முன்னதாக, நியூசிலாந்தை எதிர்த்து தனது முதல் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா, பின்னர் ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியில் 1-7 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க: வெள்ளி மங்கை மீராவுக்கு ரூ.2 கோடி, பணி உயர்வு - ரயில்வே அமைச்சர் அறிவிப்பு

Last Updated : Jul 27, 2021, 11:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.