டோக்கியோ ஒலிம்பிக்கின் ஐந்தாவது நாளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகளின் முழுமையான அட்டவணை கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது. (அனைத்தும் இந்திய நேரப்படி). குறிப்பாக தமிழ்நாடு வீரர்கள் கே.சி.கணபதி, வருண் தக்கர், நேத்ரா குமணன், சரத் கமல் ஆகியோரும் நாளை விளையாடுகின்றனர்.
-
India at #Tokyo2020
— SAIMedia (@Media_SAI) July 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Take a look at @Tokyo2020 events scheduled for 27 July.
Catch #TeamIndia in action on @ddsportschannel and send in your #Cheer4India messages below. pic.twitter.com/zVA77zoYQd
">India at #Tokyo2020
— SAIMedia (@Media_SAI) July 26, 2021
Take a look at @Tokyo2020 events scheduled for 27 July.
Catch #TeamIndia in action on @ddsportschannel and send in your #Cheer4India messages below. pic.twitter.com/zVA77zoYQdIndia at #Tokyo2020
— SAIMedia (@Media_SAI) July 26, 2021
Take a look at @Tokyo2020 events scheduled for 27 July.
Catch #TeamIndia in action on @ddsportschannel and send in your #Cheer4India messages below. pic.twitter.com/zVA77zoYQd
துப்பாக்கிச்சுடுதல் (ஏர் பிஸ்டல் கலப்பு அணி)
காலை 5:30 - மனு பாக்கர்/சௌரப் சவுத்ரி, யஷஸ்வினி சிங் தேஸ்வால்/அபிஷேக் வர்மா - 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவு தகுதிச்சுற்று 1
காலை 6:15 - மனு பாக்கர்/சௌரப் சவுத்ரி, யஷஸ்வினி சிங் தேஸ்வால்/அபிஷேக் வர்மா - தகுதிச்சுற்று 2 (முதல் சுற்றில் தகுதி பெறும்பட்சத்தில்)
காலை 7:30 - 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி வெண்கல பதக்க போட்டி
காலை 8:07 - 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி தங்கப் பதக்க போட்டி
துப்பாக்கிச்சுடுதல் (ஏர் ரைஃபிள் கலப்பு அணி)
காலை 9:45 - இளவேனில் வாலறிவன்/திவ்யான்ஷ் சிங் பன்வார், அஞ்சும் மௌட்கில்/தீபக் குமார் - 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு அணி பிரிவு தகுதிச்சுற்று 1
காலை 10:30 - இளவேனில் வாலறிவன்/திவ்யான்ஷ் சிங் பன்வார், அஞ்சும் மௌட்கில்/தீபக் குமார் - தகுதிச்சுற்று 2 (முதல் சுற்றி தகுதிபெறும்பட்சத்தில்)
காலை 11:45 - 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு அணி வெண்கல பதக்கப் போட்டி
மதியம் 12:22 - 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு அணி தங்கப் பதக்க போட்டி
பாய்மர படகு போட்டி
காலை 8:35 - நேத்ரா குமணன் - பெண்கள் லேசர் ரேடியல் பிரிவு - ரேஸ் 5, தொடர்ந்து ரேஸ் 6.
காலை 8:45 - விஷ்ணு சரவணன் - ஆண்கள் லேசர் பிரிவு - ரேஸ் 4, தொடர்ந்து ரேஸ் 5, 6.
காலை 11:20 - கே.சி.கணபதி, வருண் தக்கர் - ஆண்கள் ஸ்கிஃப் ஈஆர் பிரிவு - ரேஸ் 1. தொடர்ந்து 2, 3.
ஹாக்கி (ஆண்கள்)
காலை 6:30 - இந்தியா vs ஸ்பெயின் - குரூப் 'ஏ'
பேட்மிண்டன்
காலை 8:30 - சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி vs பென் லேன், ஷான் வெண்டி (இங்கிலாந்து) - ஆண்கள் இரட்டையர் குரூப் 'ஏ' பிரிவு
டேபிள் டென்னிஸ்
காலை 8:30 - சரத் கமல் vs லாங் மா (சீனா) - ஆண்கள் ஒற்றையர் சுற்று 3
குத்துச்சண்டை
காலை 10:57 - லோவ்லினா போர்கோஹைன் vs நாடின் அபெட்ஸ் (ஜெர்மனி) - பெண்கள் வெல்டர்வெயிட் (64 - 69 கிலோ)
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: மீண்டும் தோற்றது இந்தியா