ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக் 4ஆம் நாள்: களமாடும் முக்கிய இந்திய வீரர்கள்!

author img

By

Published : Jul 25, 2021, 11:54 PM IST

ஒலிம்பிக் தொடரின் நான்காம் நாளான நாளை (ஜூலை 26) இந்தியா சார்பில் பங்கேற்கும் முக்கிய வீரர்கள் குறித்த தொகுப்பு

டோக்கியோ ஒலிம்பிக் 4ஆம் நாள்
டோக்கியோ ஒலிம்பிக் 4ஆம் நாள்

டோக்கியோ ஒலிம்பிக்கின் மூன்றாம் நாளில் இந்தியா பதக்கம் ஏதும் பெறவில்லை. இன்று (ஜூலை 25) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மனு பாக்கர், திவ்யான்ஷ் சிங் பன்வார், யஷஸ்வினி சிங், தீபக் குமார் ஆகியார் ஏமாற்றமளித்தனர். அதேசமயம் நேற்று (ஜூலை 24) மீராபாய் சானு பெற்ற வெள்ளி பதக்கம்தான் இந்தியா பெற்றிருக்கும் ஒற்றை பதக்கமாகும்.

மணிகா பத்ரா, மேரி கோம், பி.வி.சிந்து, அர்ஜூன் லால், அரவிந்த் சிங் ஆகியோர் அடுத்தடுத்த சுற்றிற்கு முன்னேறியிருப்பது இந்தியாவிற்கு இன்றைய ஆறுதலாகும். இந்நிலையில், நான்காம் நாளான நாளை (ஜூலை 26) இந்தியா சார்பில் பங்கேற்கும் முக்கிய வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.

சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி - பேட்மிண்டன்

சீனாவிற்கு எதிரான பரபரப்பான போட்டியில் வென்ற சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி, இம்முறை இந்தோனேசியாவின் மார்கஸ் பெர்னால்டி கிதியோன் & கெவின் சஞ்சய சுகமுல்ஜோ ஜோடியை சந்திக்கிறது. அதனால் நாளை(ஜூலை.26) ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் ஐயமுமில்லை.

சுதிர்தா முகர்ஜி - டேபிள் டென்னிஸ்

சுவீடன் நாட்டின் லிண்டா பெர்க்ஸ்ட்ராமை வீழ்த்தி ஒலிம்பிக்கின் முதல் போட்டியிலேயே வெற்றிகண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை சுதிர்தா முகர்ஜி. உலகின் 98ஆவது நிலை வீரரான சுதிர்தா, நாளை(ஜூலை.26) 55ஆவது நிலை வீராங்கனையான போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ஃபூ யூ உடன் மோதுகிறார்.

மணிகா பத்ரா - டேபிள் டென்னிஸ்

டேபிள் டென்னிஸில், தற்போது இந்தியாவின் நம்பிக்கையாக இருக்கும் மணிகா பத்ரா நாளை(ஜூலை.26) உலகின் 16ஆவது நிலை வீரரான சோபியா போல்கனோவா-ஐ சந்திக்கிறார்.

அங்கத் வீர் சிங் பஜ்வா - துப்பாக்கி சுடுதல்

ஆண்கள் ஸ்கீட் தகுதிச்சுற்றில் 11ஆவது இடத்தை பிடித்துள்ள அங்கத் வீர் சிங் பஜ்வா-க்கு நாளைய ஆட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஆண்கள் வில்வித்தை அணி

அதானு தாஸ், பிரவின் ஜாதவ், தருண்தீப் ரா ஆகியோர் ஆண்கள் வில்வித்தை பிரிவில் நாளைய ஆட்டத்தில் வென்று காலிறுதிக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி தற்போது குரூப் ஆஃப் 64 பட்டியலில் மிகவும் பின்தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோளாறால் கைவிட்டுப்போன பதக்கம்; மனு பாக்கரின் சோக கதை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.