டோக்கியோ (ஜப்பான்): டோக்கியோ ஒலிம்பிக்கின் இரண்டாவது நாளில் இந்தியா ஒரு வெள்ளி பதக்கத்தை பெற்று பதக்கப்பட்டியலில் 12ஆவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், நாளை (ஜூலை 25) இந்தியாவிற்கான முக்கியமான நாள் என்றே கூற வேண்டும். நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோருக்கான போட்டி நாளை நடைபெறுகிறது. நாளை நடைபெறும் போட்டிகள் குறித்த விவரம் (இந்திய நேரப்படி):
பேட்மிண்டன்
காலை 10:40: மகளிர் ஒற்றையர் பிரிவு - குரூப் 'ஜெ' - பிவி சிந்து vs க்சேனியா பொலிகார்போவா (இஸ்ரேல்)
ஹாக்கி (ஆண்கள் அணி)
காலை 3:00: இந்தியா vs ஆஸ்திரேலியா
குத்துச்சண்டை
காலை 7:30: மேரி கோம் - பெண்கள் ஃபிளைவெயிட் ரவுண்ட் ஆஃப் 32
காலை 8:48: மனிஷ் கௌசிக் - ஆண்கள் லைட்வெயிட் ரவுண்ட் ஆஃப் 32
ஜிம்னாஸ்டிக்
காலை 6:30: பிரணதி நாயக் - பெண்கள் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் தகுதிச்சுற்று
படகுப்போட்டி
காலை 8:35 - நேத்ரா குமணன் - பெண்கள் லேசர் ரெடியல் - ரேஸ் 1
காலை 11:05 - விஷ்ணு சரவணன் - ஆண்கள் லேசர் - ரேஸ் 1
துப்பாக்கிச் சுடுதல்
காலை 5:30 - மனு பாக்கர், யஷஸ்வினி சிங் தேஸ்வால் - பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதிச்சுற்று
காலை 6:00 - அங்கத் பஜ்வா, மைராஜ் அகமது கான் - ஆண்கள் ஸ்கீட் தகுதிச்சுற்று நாள் 1
காலை 7:45 - மனு பாக்கர், யஷஸ்வினி சிங் தேஸ்வால் பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிச்சுற்று (தகுதிச்சுற்றில் வெற்றி பெறும்பட்சத்தில்)
காலை 9:30 - தீபக் குமார், திவ்யான்ஷ் சிங் பன்வார் - ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் தகுதிச்சுற்று
நண்பகல் 12:00 - தீபக் குமார், திவ்யான்ஷ் சிங் பன்வார் - ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் (தகுதிச்சுற்றில் வெற்றி பெறும்பட்சத்தில்)
நீச்சல்
மாலை 3:32 - மானா பட்டேல் - பெண்கள் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் ஹீட்ஸ்
மாலை 3:52 - சஜன் பிரகாஷ் - ஆண்கள் 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ஹீட்ஸ்
மாலை 4:49 - ஸ்ரீஹரி நடராஜ் - ஆண்கள் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் ஹீட்ஸ்
டேப்பிள் டென்னிஸ்
காலை 10:30 - சத்தியன் ஞானசேகரன், சரத் கமல்/ மணிகா பத்ரா, சுதிர்தா முகர்ஜி- ஆண்கள், பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்று
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: நெதர்லாந்திடம் தோற்றது இந்தியா