ETV Bharat / sports

ஒலிம்பிக் துடுப்புப் படகு போட்டி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய வீரர்கள் - Tokyo Olympics Double sculls

டோக்கியோ ஒலிம்பிக்கின் துடுப்புப் படகு பிரிவின் அரையிறுதி போட்டிக்கு அர்ஜூன் லால் , அரவிந்த் சிங் ஜோடி தகுதி பெற்றுள்ளனர்.

Tokyo Olympics
ஒலிம்பிக் துடுப்புப்படகு போட்டி
author img

By

Published : Jul 25, 2021, 3:08 PM IST

டோக்கியோ ஒலிம்பிக்கின் துடுப்புப் படகு பிரிவின் ஆடவர் இரட்டையர் சுற்றுக்கான போட்டி இன்று (ஜூலை.25) காலை நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய இணை அர்ஜூன் லால் மற்றும் அரவிந்த் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்கள் பந்தய தூரத்தை 6 மணி 51 நிமிடம் 36 விநாடிகளில் கடந்து மூன்றாவது இடத்தை பிடித்து அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தனர்.

போலந்து நாட்டை சேர்ந்த ஜெர்சி கோவல்ஸ்கி, ஆர்தூர் மிகோலாஜ்செவ்ஸ்கி ஆகியோர் பந்தய தூரத்தை 6 மணி 43 நிமிடம் 44 விநாடிகளில் கடந்து தரவரிசை பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தனர்.

அர்ஜூன் லால், அரவிந்த் சிங் ஜோடி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளதால், பதக்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

இதையும் படிங்க: Tokyo Olympics : தமிழ்நாடு வீரர் சத்தியன் ஞானசேகரன் தோல்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.