டோக்கியோ: ஜூலை 23ஆம் தேதி தொடங்கிய 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடர் இன்றுடன் (ஆக.8) முடிவடைகிறது. நேற்று(ஆகஸ்ட். 7) மட்டும் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், மல்யுத்தப் போட்டியில் பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
அதன்படி, பதக்கப் பட்டியலில், சீனா 38 தங்கம், 31 வெள்ளி, 18 வெண்கலம் என 87 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 36 தங்கம், 39 வெள்ளி, 33 வெண்கலம் என 108 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் ஜப்பான் 27 தங்கம், 12 வெள்ளி, 17 வெண்கலம் என 56 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை ஓர் தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என ஏழு பதக்கங்களுடன் 47ஆவது இடத்தில் உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையும் படிங்க: விரைவில் ஒலிம்பிக் சாதனையை முறியடிப்பேன் - நீரஜ் சோப்ரா அதிரடி