டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் ஒன்பதாம் நாள் (ஜூலை 31) இந்தியாவிற்கு மகிழ்ச்சியையும், மாரடைப்பையும் ஒருங்கே தந்துள்ளது. நாளைய தினம் (ஆக.1) இந்தியா சார்பில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள வீரர்கள், போட்டிகள் குறித்த விவரம் பின்வருமாறு:
சதீஷ் குமார் - குத்துச்சண்டை
இந்தியாவின் முதல் சுப்பர் ஹெவிவெயிட் (+91கிலோ) குத்துச்சண்டை வீரரான சதீஷ் குமார், நேற்று முன்தினம் (ஜூலை 29) ஜமைக்கா வீரர் ரிக்காட்டோ ப்ரவுனை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
32 வயதான சதீஷ் குமார் நாளை நடைபெறும் காலிறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரரான பகோதிர் ஜலோலோவ் உடன் மோதுகிறார். ஆசிய மற்றும் உலக சாம்பியனான பகோதிரை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு சதீஷ் குமார் முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.வி.சிந்து - பேட்மிண்டன்
இந்திய பேட்மிண்டனின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சீனா வீராங்கனை ஹி பிங்ஜியாவோவுடன் பி.வி. சிந்து மோதவுள்ளார்.
இந்தியா ஆடவர் ஹாக்கி அணி
டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் நாக்-அவுட் போட்டிக்கு முந்தைய ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்திய அணி. நாளை நடைபெறும் காலிறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியைச் சந்திக்கிறது.
இதையும் படிங்க: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் தற்காலிக ஓய்வு