ETV Bharat / sports

ஒலிம்பிக்கின் வெற்றி உலகிற்கு நம்பிக்கை தரும் - தாமஸ் பாக்

டோக்கியோ ஒலிம்பிக் வெற்றிகரமாக நடைபெற்றது ஒட்டுமொத்த உலகிற்கே நம்பிக்கை அளித்துள்ளது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் தெரிவித்துள்ளார்.

தாமஸ் பாக்
தாமஸ் பாக்
author img

By

Published : Aug 8, 2021, 3:39 PM IST

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவடைகிறது. 2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய இந்த போட்டி, கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஓராண்டு தள்ளிப் போனது.

முதலில் பார்வையாளர்களுடன் போட்டிகள் நடைபெறுவதாக இருந்த நிலையில், ஜப்பானில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்றது.

போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் போட்டி குறித்து பேட்டியளித்துள்ளார். அவர் பேசியதாவது, "டோக்கியோ ஒலிம்பிக் வெற்றிகரமாக நடைபெற்றது ஒட்டுமொத்த உலகிற்கே நம்பிக்கை அளித்துள்ளது.

இதற்கு உறுதுணையாக நின்ற வீரர்களுக்கு பாராட்டுகள். சரியான தருணத்தில் இந்த ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது" என்றார்.

200க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 11,000 வீரர்கள் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்றனர். 39 தங்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

இதையும் படிங்க: டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற முதல் கேப்டன் வில்லியம்சனுக்கு பிறந்தநாள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.