டோக்கியோ: பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் மகாவீர் ஸ்வரூப் நான்காவது இடத்தை பிடித்து தோல்வியுற்றார்.
துப்பாக்கி சுடும் வீரர் மகாவீர் ஸ்வரூப் அன்கல்கர் இறுதிச் சுற்றில் 203.9 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தார். இதனால் இவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பு நழுவியது.
முன்னதாக, 51.2, 102.1, 122.7, 143.0, 164.2, 183.6 புள்ளிகளுடன் முன்னிலை வகித்த இவர் இறுதியில் 203.9 புள்ளிகளை எடுத்தார். சீன வீரரான ஷாவ் டோங் 246.5 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
இவருக்கு அடுத்தபடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அன்ட்ரி டோரோஷென்கோ 245.1 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், கொரியா நாட்டை சேர்ந்த ஜனிகோ பார்க் 224.5 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச் சென்றனர்.
தகுதிச் சுற்றில் ஏழாவது இடத்தில் இருந்த ஸ்வரூப், 615.2 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து இறுதிச்சுற்றில் பதக்கம் வெல்லாமல் தோல்வியைத் தழுவினார்.
எஸ்எச் 1 ரைஃபிள் பிரிவில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தங்களது கைகள், தோள் பட்டையிலேயே துப்பாக்கிய
எடையையும் தாங்கிப் பிடித்து சுட வேண்டும். இந்தப் போட்டிகளில் கால்களில் குறைபாடு உள்ளவர்கள் உட்கார்ந்த இடத்திலும், நின்றவாறும் என இருவகைகளிலும் போட்டியில் பங்கேற்கின்றனர்.
இதையும் படிங்க: PARALYMPICS: வினோத் குமார் பதக்கம் பறிப்பு