டெல்லி : டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார் நீரஜ் சோப்ரா.
இவருக்கு பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர், முதலமைச்சர் மற்றும் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிசிசிஐ சார்பில் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிசிசி்ஐ கௌரவச் செயலாளரும், ஆசிய கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான ஜெய் ஷா ட்விட்டரில், “ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடியும், வெள்ளி வென்ற மீராபாய் சானு, ரவிகுமார் தாஹியா ஆகியோரும் தலா ரூ.50 லட்சமும், வெண்கலம் வென்ற பி.வி.சிந்து, லால்லினா, பஜ்ரங் புனியா ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சம் அளிக்கப்படும்.
-
INR 1 Cr. - 🥇 medallist @Neeraj_chopra1
— Jay Shah (@JayShah) August 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
50 lakh each - 🥈 medallists @mirabai_chanu & Ravi Kumar Dahiya
25 lakh each – 🥉 medallists @Pvsindhu1, @LovlinaBorgohai, @BajrangPunia
INR 1.25 Cr. – @TheHockeyIndia men's team @SGanguly99| @ThakurArunS| @ShuklaRajiv
">INR 1 Cr. - 🥇 medallist @Neeraj_chopra1
— Jay Shah (@JayShah) August 7, 2021
50 lakh each - 🥈 medallists @mirabai_chanu & Ravi Kumar Dahiya
25 lakh each – 🥉 medallists @Pvsindhu1, @LovlinaBorgohai, @BajrangPunia
INR 1.25 Cr. – @TheHockeyIndia men's team @SGanguly99| @ThakurArunS| @ShuklaRajivINR 1 Cr. - 🥇 medallist @Neeraj_chopra1
— Jay Shah (@JayShah) August 7, 2021
50 lakh each - 🥈 medallists @mirabai_chanu & Ravi Kumar Dahiya
25 lakh each – 🥉 medallists @Pvsindhu1, @LovlinaBorgohai, @BajrangPunia
INR 1.25 Cr. – @TheHockeyIndia men's team @SGanguly99| @ThakurArunS| @ShuklaRajiv
அதேபோல் இந்திய ஹாக்கி ஆடவர் அணிக்கு ரூ.1.25 கோடி அளிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் தடகளத்தில் 124 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா சாதித்துள்ளது. நீரஜ் சோப்ரா தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.
இவரை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, “டோக்கியோ ஒலிம்பிக்கில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : டோக்கியோ ஒலிம்பிக்- தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து!