டோக்கியோ ஒலிம்பிக்கில் ஃப்ரீஸ்டைல் மல்யுத்த விளையாட்டில் 57 கிலோ எடைப் பிரிவில் ரஷ்ய வீரர் சவுர் உகெவை எதிர்கொண்டு 4-க்கு 7 என்கிற புள்ளி கணக்கில் தோல்வி கண்டாலும், இந்தியாவுக்கு 2ஆவது வெள்ளிப் பதக்கத்தை வென்று தந்துள்ளார் ரவிக்குமார் தாஹியா. அவருக்கு பிரதமர் மோடி உள்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளி வென்ற ரவிக்குமார் தாஹியாவுக்கு, பல்வேறு சலுகைகளை ஹரியானா அரசு அறிவித்துள்ளது. அவை,
- 4 கோடி ரூபாய் பரிசு தொகை
- ஹரியானாவில் எந்த இடத்திலாவது 50 விழுக்காடு சலுகையில் நிலம் வாங்கிக் கொள்ளலாம்.
- முதல் நிலை அரசு வேலை
முன்னதாக, பஞ்சாப் மாநில அரசு வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி ஆடவர் அணியில் இடம்பெற்றிருந்த பஞ்சாப் வீரர்களுக்கு தலா ரூபாய் ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Tokyo Olympics: இறுதிவரை போராடி தோற்றார் புனியா; வெண்கலம் ஜஸ்ட்-மிஸ்!