ETV Bharat / sports

இலவச விமான பயணம் - ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர்களுக்கு அதிரடி சலுகை - கௌஷிக் கோனா

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு இலவச விமான பயணம் வழங்குவதாக கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tokyo Olympics
Tokyo Olympics
author img

By

Published : Aug 8, 2021, 4:01 PM IST

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இன்றுடன் (ஆக்.8) நிறைவடையும் நிலையில், இந்தியாவுக்கு இம்முறை ஏழு பதக்கங்கள் கிடைத்துள்ளன.

பளு தூக்கும் போட்டியில் மீராபாய் சானு, பேட்மின்டனில் பி.வி. சிந்து, குத்துச்சண்டையில் லவ்லினா, மல்யுத்தத்தில் ரவிக்குமார் மற்றும் பஜ்ரங் பூனியா, ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா, இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஆகியோர் பதக்கம் பெற்றுள்ளனர்.

பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்துவருகின்றன. இந்நிலையில், கோ பர்ஸ்ட்(GO FIRST) என்ற விமான போக்குவரத்து சேவை நிறுவனம், டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு அதிரடி சலுகை அறிவித்துள்ளது.

பதக்கம் பெற்ற வீரர்களின் சாதனையை பாராட்டும் விதமாக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தங்கள் நிறுனத்தின் விமானங்களில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் கௌஷிக் கோனா வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஒலிம்பிக்கின் வெற்றி உலகிற்கு நம்பிக்கை தரும் - தாமஸ் பாக்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.