ETV Bharat / sports

மக்கள் அன்பை பொழிகிறார்கள்: மீராபாய் சானு நேர்காணல்! - Mirabai Chanu interview

நடந்தது நடந்ததுதான் அதை யாராலும் மாற்ற முடியாது, இன்னும் நிறைய போட்டிகள் இருக்கின்றன. உனக்கு இளமை இருக்கிறது, சாதிக்க முடியும் என பயிற்சியாளர் விஜய் என்னை ஊக்கப்படுத்தினார். எனது பயிற்சியையும் யுக்திகளையும் மாற்றிக் கொண்டேன். இப்போது உலக சாம்பியனாக இருக்கிறேன். தற்போதைய வெற்றி எனக்கு இன்னும் பலத்தை கொடுத்திருக்கிறது.

மக்கள் அன்பை பொழிகிறார்கள்: மீராபாய் சானு நேர்காணல்!

author img

By

Published : Jul 30, 2021, 5:47 PM IST

ஹைதராபாத்: டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை (வெள்ளி) பெற்று தந்த பளு தூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு நமது ஈடிவி பாரத் செய்தியாளருக்கு அளித்த நேர்காணலின் தொகுப்பு.

மக்கள் அன்பை பொழிகிறார்கள்: மீராபாய் சானு நேர்காணல்!

இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் வென்று தந்தது எப்படி இருக்கிறது?

அது சொல்லால் விவரிக்க முடியாத அனுபவம். நான் இந்தியா வந்ததில் இருந்து மக்கள் என் மீது அன்பு மழையை பொழிகிறார்கள். விமான நிலையம் வந்த எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, மிக்க மகிழ்ச்சி.

இறுதியாக எத்தனை பீட்சாக்களை சாப்பிட்டீர்கள்?

நான் எக்கச்சக்கமான பீட்சாக்களை சாப்பிட்டேன் (சிரித்துக்கொண்டே). இந்தியா வந்ததிலிருந்து பீட்சாக்களை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். கணக்கு வைக்க மறந்துவிட்டேன்.

ரியோ ஒலிம்பிக்கில் நீங்கள் பெரிதாக சாதிக்கவில்லை. எது உங்களை உந்தித் தள்ளியது?

ரியோ ஒலிம்பிக்தான் எனக்கான அறிமுகம், அதற்கு கடுமையாக உழைத்தேன். அதிலும் எனக்கு பதக்கம் வெல்லும் வாய்ப்பு இருந்தது. ஆனால், அன்று அது என்னுடைய நாளாக இல்லை. இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு இருந்தது. கடின உழைப்பை போட்டும் தோல்வியை சந்தித்தது ஏன் என்று புரியவில்லை. ரியோ தோல்விக்கு பிறகு சில நாட்கள் சாப்பிடாமல் இருந்தேன். என் குடும்பமும், பயிற்சியாளரும்தான் என்னை ஆற்றுப்படுத்தினார்கள்.

நடந்தது நடந்ததுதான் அதை யாராலும் மாற்ற முடியாது, இன்னும் நிறைய போட்டிகள் இருக்கின்றன. உனக்கு இளமை இருக்கிறது, சாதிக்க முடியும் என பயிற்சியாளர் விஜய் என்னை ஊக்கப்படுத்தினார். எனது பயிற்சியையும் யுக்திகளையும் மாற்றிக் கொண்டேன். இப்போது உலக சாம்பியனாக இருக்கிறேன். தற்போதைய வெற்றி எனக்கு இன்னும் பலத்தை கொடுத்திருக்கிறது.

கரோனா ஊரடங்கு நேரத்தில் நீங்கள் மிகவும் துயரப்பட்டீர்களா?

ஆம், இரண்டு மாதங்களாக நான் பயிற்சி மேற்கொள்ளவில்லை. பளு தூக்குதலில் பயிற்சி இல்லாமல் இருப்பது மிகவும் சிரமம். கரோனா ஊரடங்கு காலங்களில் நான் பயிற்சி மேற்கொள்ள சிரமமாக இருந்தது. உடல் மெலிந்து காணப்பட்டேன். அப்போது பட்டியாலாவில் இருந்தேன், பயிற்சிக்கு அனுமதி கோரியிருந்தேன். என் பயிற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும் என விளையாட்டுத் துறை அமைச்சரிடம் தெரிவித்தேன். பின்னர் இரண்டு மாதத்துக்கு பிறகு பயிற்சி எடுக்கும்போது என உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை; சிரமமாகதான் இருந்தது.

வீட்டை விட்டு நீண்ட நாட்கள் பிரிந்திருப்பீர்கள். நீங்கள் செய்த பெரிய தியாகம் என்ன?

2016ஆம் ஆண்டு நான் உலக சாம்பியன் பட்டம் வென்றபோது என் அக்கா திருமணம். அதனால் அக்கா திருமணத்துக்கு செல்ல முடியவில்லை. நான் செய்த எத்தனையோ தியாகங்களில் இதுவும் ஒன்று. அதேபோல் உணவு விஷயத்தில் எனக்கு பிடித்த உணவுகளை தவிர்க்க வேண்டிய சூழல். எந்த ஒரு விழாக்களுக்கும் செல்வதில்லை; மொபைல் போன் பயன்படுத்துவது இல்லை. இந்தியாவுக்காக எதாவது சாதிக்க வேண்டும் என துடித்தேன். அதில்தான் என் கவனம் முழுவதும் இருந்தது.

EXCLUSIVE:

பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கத்தின் நிறத்தை மாற்றும் எண்ணம் இருக்கிறதா?

இப்போது வெள்ளி பதக்கம் பெற்றிருப்பதே எனக்கு மகிழ்ச்சி. 2022-இல் காமன்வெல்த், ஏசியா கேம்ஸ் போட்டிகள் இருக்கின்றன. அதில் நான் சிறப்பாக செயல்பட வேண்டும்; அதன்பிறகு பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கத்தை தங்க பதக்கமாக மாற்றுவேன்.

தற்போது என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

மக்களை சந்தித்து வருகிறேன்; மகிழ்ச்சியாக இருக்கிறேன். மக்கள் அன்பை பொழிகிறார்கள். இன்னும் சில நாட்களில் மீண்டும் பயிற்சியை தொடங்க இருக்கிறேன்.

இதையும் படிங்க: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.