ETV Bharat / sports

ஒரு கோடி பரிசு - ஒலிம்பிக் வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்! - ஹாக்கி வீரர்களுக்கு 1 கோடி

ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, அணியில் இடம்பெற்றிருந்த பஞ்சாப் வீரர்களுக்கு தலா ஒரு கோடி பரிசு (ரூ. 1 கோடி) வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Punjab players
Punjab players
author img

By

Published : Aug 5, 2021, 1:56 PM IST

சண்டிகர்: 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் ஹாக்கி ஆடவர் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. அதற்கு நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தனியார் நிறுவனத்தினர் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

இதனிடையே, பஞ்சாப் மாநில அரசு இந்திய ஹாக்கி ஆடவர் அணியில் இடம்பெற்றிருந்த பஞ்சாப் வீரர்களுக்கு தலா ரூபாய் ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இது குறித்து பஞ்சாப் விளையாட்டுத் துறை அமைச்சர் ராணா குர்மித் சிங் சோதி தனது ட்விட்டர் பதிவில், "இந்திய ஹாக்கியின் வரலாற்று நாளில் பஞ்சாப் வீரர்களுக்கு தலா ரூபாய் ஒரு கோடி பரிசு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

அந்த வகையில், ஹாக்கி அணியில் இடம்பெற்றிருந்த மன்தீப் சிங், ஹர்மன்பிரீத் சிங், ரூபிந்தர் சிங், ஹர்திக் சிங், ஜாம்ஷெட் சிங், தில் பிரித் சிங், குர்ஜந்த் சிங், மன்ப்ரீத் சிங் ஆகிய எட்டு வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: இந்தியர்களின் நினைவில் இந்த வரலாறு பொறிக்கப்படும் - இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.