டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் பெண்கள் குத்துச்சண்டையில் மிடில்வெயிட் (69-75 கிலோ) எடைப்பிரிவில் ’ரவுண்ட் ஆஃப் 16’ போட்டிகள் இன்று (ஜூலை.28) நடைபெற்றது.
இந்தச் சுற்றில் இந்திய வீராங்கனை பூஜா ராணி, அல்ஜீரியா வீராங்கனை இக்ராக் சாய்ப் உடன் மோதினார். இந்தப் போட்டியில், பூஜா, அல்ஜீரிய வீராங்கனையை 5-0 என்ற புள்ளியில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். இதன்மூலம், கால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பூஜா ராணி அசத்தியுள்ளார்.
-
#TeamIndia | #Tokyo2020 | #Boxing
— Team India (@WeAreTeamIndia) July 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Women's Middle Weight 69-75kg Round of 16 Results
Complete domination from @BoxerPooja to move onto the Quarterfinals. #WayToGo champ 👏🙌🥊#RukengeNahi #EkIndiaTeamIndia #Cheer4India pic.twitter.com/Cf6zJvPYSE
">#TeamIndia | #Tokyo2020 | #Boxing
— Team India (@WeAreTeamIndia) July 28, 2021
Women's Middle Weight 69-75kg Round of 16 Results
Complete domination from @BoxerPooja to move onto the Quarterfinals. #WayToGo champ 👏🙌🥊#RukengeNahi #EkIndiaTeamIndia #Cheer4India pic.twitter.com/Cf6zJvPYSE#TeamIndia | #Tokyo2020 | #Boxing
— Team India (@WeAreTeamIndia) July 28, 2021
Women's Middle Weight 69-75kg Round of 16 Results
Complete domination from @BoxerPooja to move onto the Quarterfinals. #WayToGo champ 👏🙌🥊#RukengeNahi #EkIndiaTeamIndia #Cheer4India pic.twitter.com/Cf6zJvPYSE
வரும் ஜூலை 31ஆம் தேதி நடைபெறும் கால் இறுதிச்சுற்றில் சீன வீராங்கனை லீ கியான் உடன் பூஜா மோதுகிறார். மேலும், இந்திய நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், கொலம்பியா வீராங்கனை இங்க்ரிட் வலென்சியா உடன் நாளை (ஜூலை.29) மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை: அடுத்த சுற்றிற்கு முன்னேறினார் தீபிகா