டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் பெண்கள் வில்வித்தையில் ’ரவுண்ட் ஆஃப் 16’ போட்டிகள் இன்று (ஜூலை.28) நடைபெற்றன. இப்போட்டியில், இந்தியாவின் தீபிகா குமாரி அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஜெனிஃபர் முசினோ ஃபெர்னான்டஸ் உடன் மோதினார்.
போட்டா போட்டி...
இப்போட்டியில்,ஜெனிஃபர் முதல் செட்டை 26-25 என்ற புள்ளிகளில் வென்றார். தொடர்ந்து, தீபிகா இரண்டாவது, மூன்றாவது செட்களை 28-25, 27-25 என்ற புள்ளிகளில் வென்று பதிலடி கொடுத்தார்.
இதனையடுத்து, நான்காவது செட்டை ஜெனிஃபர் 25-24 என்ற செட் கணக்கில் வென்று ஆட்டத்தை சமன் நிலைப்படுத்தினார். வெற்றியைத் தீர்மானிக்கும் ஐந்தாவது சுற்றில் தீபிகா முதலில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி, 26-25 என்ற புள்ளிகளில் செட்டை முடித்து ஆட்டத்தை வென்றார்.
ரவுண்ட் ஆஃப் 8
-
#TeamIndia | #Tokyo2020 | #Archery
— Team India (@WeAreTeamIndia) July 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Women's Individual 1/16 Eliminations Results@ImDeepikaK marches through to the 1/8 Elimination Round recording a win against Jennifer Fernandez. #AllTheBest Deepika 👏🙌🏹🇮🇳 #RukengeNahi #EkIndiaTeamIndia #Cheer4India pic.twitter.com/86DSoaeFN4
">#TeamIndia | #Tokyo2020 | #Archery
— Team India (@WeAreTeamIndia) July 28, 2021
Women's Individual 1/16 Eliminations Results@ImDeepikaK marches through to the 1/8 Elimination Round recording a win against Jennifer Fernandez. #AllTheBest Deepika 👏🙌🏹🇮🇳 #RukengeNahi #EkIndiaTeamIndia #Cheer4India pic.twitter.com/86DSoaeFN4#TeamIndia | #Tokyo2020 | #Archery
— Team India (@WeAreTeamIndia) July 28, 2021
Women's Individual 1/16 Eliminations Results@ImDeepikaK marches through to the 1/8 Elimination Round recording a win against Jennifer Fernandez. #AllTheBest Deepika 👏🙌🏹🇮🇳 #RukengeNahi #EkIndiaTeamIndia #Cheer4India pic.twitter.com/86DSoaeFN4
இதற்கு முன்னர் நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 32இல் தீபிகா, பூடான் நாட்டு வீராங்கனை கர்மாவை வீழ்த்தியிருந்தார். தற்போது இந்தச் சுற்றிலும் வென்று வரும் ஜூலை 30ஆம் தேதி நடைபெறும் கால் இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்றான ’ரவுண்ட் ஆஃப் 8’ சுற்றுக்கு தீபிகா குமாரி முன்னேறியுள்ளார்.
இதையும் படிங்க: பெண்கள் குத்துச்சண்டை: கால் இறுதிக்குச் சென்றார் பூஜா ராணி!