டோக்கியோ (ஜப்பான்): ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் பெரும் வீரர்களுக்கும், அவர்களது பயிற்சியாளர்களுக்கும் பரிசுத் தொகை வழங்கப்படும் என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா தெரிவித்துள்ளார்.
வீரர்களுக்கு பரிசு
ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு 12 லட்சத்து 50ஆயிரம் ரூபாய், வெள்ளி வெல்லும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய், வெண்கலம் வெல்லும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு 7லட்சத்து 50ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவின் பயிற்சியாளர் விஜய் சர்மாவுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
பயிற்சியாளருக்கு ரூ.10 லட்சம் பரிசு
மேலும், ஒலிம்பிக்கில் தங்கம், வெள்ளி, வெண்கலம் முறையே வெல்பவர்களுக்கு ரூ. 75 லட்சம், ரூ. 40 லட்சம், ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்திருந்தது. ஒலிம்பிக்கில், பங்கேற்கும் ஒவ்வொரு தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கும் (National Sports Federations) போனஸ் தொகையாக 25 லட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் 1 லட்சம் ரூபாயும் , பதக்கம் வென்ற ஒவ்வொரு தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கும் 30 லட்சம் ரூபாயும் பரிசு வழங்கப்படுவதாகவும் இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: Tokyo Olympics: வெள்ளி வென்றார் மீராபாய் சானு!