டென்னிஸ் விளையாட்டின் பிரபலமான தொடராகக் கருதப்படும் யூ.எஸ். ஓபன் தொடர் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று (செப். 12) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச்சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ், ஸ்பெயினின் பாப்லே புஸ்டாவை எதிர்கொண்டார்.
பரபரப்பான இப்போட்டியின் முதல் இரண்டு செட்டையும் பாப்லே புஸ்டோ 6-3, 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி ஸ்வெரவ்விற்கு அதிர்ச்சியளித்தார். அதன்பின் நடைபெற்ற மூன்றாவது செட் ஆட்டத்தில் ஸ்வெரவ் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி தோல்வியைத் தவிர்த்தார்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஸ்வெரவ் நான்காவது, ஐந்தாவது செட்டை முறையே 6-4, 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
இதன்மூலம் யூ.எஸ். ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச்சுற்றில் அலெக்சாண்டர் ஸ்வெரவ் 3-6, 2-6, 6-3, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் பாப்லே புஸ்டாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இதையும் படிங்க:ரெய்னாவின் இடத்திற்கு ராயுடுவே சரி: ஸ்காட் ஸ்டைரிஸ்!