சீனாவில் ஆடவர்களுக்கான ஜூஹாய் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதில், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினோர், பிரான்ஸின் அட்ரியன் மன்னாரினோவுடன் மோதினார்.
20 வயதான அலெக்ஸ் டி மினோர் ஆட்டத்தின் முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் டை பிரேக்கர் முறையில் வென்றார். பின்னர் நடைபெற்ற இரண்டாவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய அவர் 6-4 என்ற கணக்கில் அந்த செட்டையும் கைப்பற்றினார்.
இதன்மூலம், டி மினோர் 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அட்ரியனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். அவர் வெல்லும் மூன்றாவது ஏ.டி.பி சாம்பியன் பட்டம் இதுவாகும்.
இதையும் படிங்க : #Nadal: வயசானாலும் ஸ்டைல் குறையாத நடால்...