2019ஆம் ஆண்டிற்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீரரும், ஸ்பேனிஷ் நாட்டைச் சேர்ந்தவருமான ரஃபேல் நடால் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோஸை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.
விருவிருப்பான இந்த ஆட்டத்தில் 6-3, 3-6, 7-6, 7-6 என்ற நேர் செட்கணக்கில் நிக் கிர்கியோஸை போராடி வென்றார். இது நடாலின் 50-ஆவது விம்பிள்டன் வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் உலகின் மூன்றாம் நிலை டென்னிஸ் வீரரான சுட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர், இங்கிலாந்தின் ஜே கிளார்கை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் 6-1, 7-6, 6-2 என்ற நேர் செட்கணக்கில் ரோஜர் பெடரர் , ஜே கிளார்க்கை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.