ETV Bharat / sports

ஆஸ்திரேலியன் ஓபன்: மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய ஆஷ்லே பார்டி, ரஃபேல் நடால்!

ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரர்களான ரஃபேல் நடால், ஆஷ்லே பார்டி, நவோமி ஓசாகா ஆகியோர் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

Watch: Wounded no.1 Barty grinds out win over Gavrilova to advance at Australian Open

author img

By

Published : Feb 11, 2021, 9:27 PM IST

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன், மெல்போர்ன் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் இரண்டாம் சுற்று போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் அமெரிக்காவில் மைக்கேல் மோவை எதிர்கொண்டார்.

இப்போட்டியில் ஆரம்பம் முதல் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஃபேல் நடால், 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் மைக்கேல் மோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ரஃபேல் நடால் vs மைக்கேல் மோ

அதேபோல் மற்றொரு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் கிரீஸ் நாட்டின் சிட்சிபாஸ் 6-7, 6-4, 6-1, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் தனசி கொக்கினாகிஸை வீழ்த்தி மூனறாம் சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி 6-1, 7-6 என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனையான டாரியா கவ்ரிலோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஆஷ்லே பார்டி vs டாரியா கவ்ரிலோவா

மற்றோரு மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த இளம் வீராங்கனை கோகோ கஃப் 4-6, 4-3 என்ற நேர் செட் கணக்கில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவிடம் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறினார்.

இதையும் படிங்க: பந்தின் தரத்தில் பிரச்னை: தரத்தை ஆராயுமாறு பிசிசிஐ கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.