விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒன்றையர் அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் முதல் நிலை வீரர் நோவக் ஜோகோவிச், 10ஆம் நிலை வீரரான டெனிஸ் ஷபோவலோவை எதிர்கொண்டார்.
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே நட்சத்திர வீரர் ஜோகோவிச்சிற்கு இளம் வீரர் ஷபோவலோ கடும் போட்டி கொடுத்தார். முதல் செட் 6-6 என சமநிலையில் முடிந்த நிலையில் டை பிரேக்கரில் ஜோகோவிச் வெற்றி பெற்று முதல் செட்டை 7-6 எனக் கைப்பற்றினார்.
-
Slices, smashes and sizzling shots delivered on Day 11 🔥#Wimbledon pic.twitter.com/1pRFeBrR3E
— Wimbledon (@Wimbledon) July 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Slices, smashes and sizzling shots delivered on Day 11 🔥#Wimbledon pic.twitter.com/1pRFeBrR3E
— Wimbledon (@Wimbledon) July 10, 2021Slices, smashes and sizzling shots delivered on Day 11 🔥#Wimbledon pic.twitter.com/1pRFeBrR3E
— Wimbledon (@Wimbledon) July 10, 2021
இரண்டாவது, மூன்றாவது செட்களையும் ஷபோவலோவின் கடுமையான சவாலை மீறி 7-5, 7-5 என கைப்பற்றிய ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
நாளை (ஜூலை 11) நடைபெறும் இறுதிப் போட்டியில் இத்தாலியைச் சேர்ந்த மேட்டியோ பெரெட்டினி என்பவரை எதிர்கொள்கிறார்.
இதையும் படிங்க: சுனில் கவாஸ்கர் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்ய நிகழ்வுகள்!