ஆஸ்திரேலியன் ஓபன் கிரண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மொல்போர்னில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று (பிப்.13) நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலகின் முன்னணி வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா ப்ளிஸ்கோவா, சகநாட்டு வீராங்கனையான கரோலினா முச்சோவாவை எதிர்கொண்டார்.
இப்போட்டியின் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய முச்சோவா 7-5, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ப்ளிஸ்கோவாவிற்கு அதிர்ச்சியளித்தார். இதன்மூலம் கரோலினா ப்ளிஸ்கோவா ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாம் சுற்றோடு வெளியேறினார்.
இன்று நடைபெற்ற மற்றோரு மூன்றாம் சுற்று ஆட்டத்தில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா, கஜகஸ்தானின் யூலியா புடிண்ட்சேவாவுடன் மோதினார். பரபரப்பான இப்போட்டியில் 6-4 என்ற கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றிய ஸ்விட்டோலினா, 6-0 என்ற கணக்கில் அடுத்த செட்டையும் கைப்பற்றி அசத்தினார்.
இதன்மூலம் எலினா ஸ்விட்டோலினா 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் யூலியா புடிண்ட்சேவாவை வீழ்த்தி நான்காம் சுற்றுக்கு முன்னேறினார்.
இதையும் படிங்க: பாரா அத்லெடிக்: தங்கம் வென்றார் சிம்ரன் யாதவ்; பதக்கங்களை குவிக்கும் இந்தியா!