அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் தலைநகரான புவெனோய் அயர்ஸில் நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நகல் - ஸ்பெயினின் ஆல்பர்ட் ராமோஸ் வினோலாஸுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இப்போட்டியில் தொடக்கத்திலேயே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சுமித் நகல் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி ஆல்பர்ட் ராமோஸிற்கு அதிர்ச்சிகொடுத்தார்.
பின்னர் சுதாரித்துக்கொண்டு விளையாடிய ஆல்பர்ட் 6-2 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை தன்வசப்படுத்தினார். இதனால் இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்ற விறுவிறுப்பில் மூன்றாம் செட்டிற்கான ஆட்டம் நடைபெற்றது.
இதில் இறுதிவரை போராடிய சுமித் நகல் 5-7 என்ற கணக்கில் மூன்றாவது செட்டை இழந்தார். இதன்மூலம் ஆல்பர்ட் ராமோஸ் 4-6, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் சுமித் நகலை வீழ்த்தி அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
-
¡Final del partido! ¡Albert Ramos-Viñolas 🇪🇸 avanza a semifinales! #ArgOpen2021 🏆 pic.twitter.com/DDnMmZPCBf
— Argentina Open (@ArgentinaOpen) March 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">¡Final del partido! ¡Albert Ramos-Viñolas 🇪🇸 avanza a semifinales! #ArgOpen2021 🏆 pic.twitter.com/DDnMmZPCBf
— Argentina Open (@ArgentinaOpen) March 5, 2021¡Final del partido! ¡Albert Ramos-Viñolas 🇪🇸 avanza a semifinales! #ArgOpen2021 🏆 pic.twitter.com/DDnMmZPCBf
— Argentina Open (@ArgentinaOpen) March 5, 2021
இத்தோல்வியின் மூலம் இந்திய அணியின் சுமித் நகல், அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிச் சுற்றோடு வெளியேறினார்.
இதையும் படிங்க: இபிஎல்: தோல்வியின்றி பயணிக்கும் செல்சி!