கடந்த மாதம் கொலம்பிய தலைநகர் போகோடாவில் நடைபெறவிருந்த பயிற்சி ஆட்டத்தில் உலகின் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரோஜர் ஃபெடரரும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரவ்வும் விளையாடுவதாக இருந்தது.
ஆனால், போகோடா மேயருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்று கலவரமாக மாறியதால், போகோடாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பயிற்சி ஆட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டதென அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ரோஜர் ஃபெடரர், நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அளித்த பேட்டியில், ஆட்டம் ரத்தானது பற்றி கூறியுள்ளார். இதுபற்றி அவர், மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கவிருந்த இந்தப் போட்டியானது ரத்தானதால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன் என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், நாங்கள் அன்றைய போட்டிக்கு தயாராக சென்றோம், ஆனால் அப்போது நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததால், பதற்றமான சூழ்நிலை உருவானதையடுத்து ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் நான் முற்றிலும் மனம் உடைந்துபோனேன் என தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் ஃபெடரர், இதுவரை 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நியூசிலாந்து அணிக்கு மாற்று வீரர் அறிவிப்பு!