டென்னிஸ் விளையாட்டின் மிகப் பிரபலமான உள்ளரங்குத் தொடரான வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இத்தொடரில் நேற்று நடைபெற்ற காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், இத்தாலியின் லோரென்சோ சோனெகோவை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய லோரென்சோ 6-2, 6-1 என அடுத்தடுத்த செட்களை கைப்பற்றி ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சியளித்தார்.
இதன் மூலம் வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிச்சுற்றில் நோவாக் ஜோகோவிச் 2-6, 1-6 என்ற நேர் செட் கணக்கில் லோரென்சோவிடம் தோல்வியைத் தழுவி, தொடரிலிருந்து வெளியேறினார்.
இதையும் படிங்க:பஞ்சாபின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான்...!