பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் நட்சத்திர வீரர் டோமினிக் தீம், நார்வேயின் காஸ்பர் ரூட்டை எதிர்த்து விளையாடினார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றிய தீம், இரண்டாவது செட்டை 6-3 என்று கைப்பற்றி அசத்தினார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தீம், மூன்றாவது செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி ரூட்டிற்கு அதிர்ச்சியளித்தார்.
இதன் மூலம் டோமினிக் தீம் 6-4, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் காஸ்பர் ரூட்டை வீழ்த்தி, பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றான நான்காம் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க:ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த தோனி!