ETV Bharat / sports

ரியோ ஓபன்: மழையால் தள்ளிப்போன டாமினிக் தீமின் ஆட்டம்! - ரியோ ஓபன்

ரியோ ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் டாமினிக் தீம் - ஜியான்லுகா மேகர் ஆகியோருக்கு இடையிலான காலிறுதிப் போட்டி மழையால் தள்ளிவைக்கப்பட்டது.

Thiem-Mager match suspended dThiem-Mager match suspended due to rainue to rain
Thiem-Mager match suspended due to rain
author img

By

Published : Feb 22, 2020, 12:45 PM IST

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் ஆடவர் டென்னிஸ் வீரர்களுக்கான ரியோ ஓபன் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது காலிறுதி போட்டியில் குரோவியாவின் போர்னா கொரிக், இத்தாலி நாட்டைச் சேர்ந்த லொரன்சோ சொனேகாவுடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கொரிக் 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இதைத்தொடர்ந்து, நடைபெற்ற நான்காவது காலிறுதிப் போட்டியில், ஆஸ்திரியாவின் நட்சத்திர வீரர் டாமினிக் தீம், இத்தாலியின் ஜியான்லுகா மேகருடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில், முதல் செட்டை ஜியான்லுகா மேகர் 7-6 என்ற கணக்கில் டைபிரேக்கர் முறையில் வென்றார்.

ரியோ ஓபன்

இதையடுத்து, நடைபெற்ற இரண்டாவது செட்டில் அவர் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இன்று தள்ளிவைக்கப்பட்டது. இந்தத் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் ஓபன் தொடரில் டாமினிக் தீம் இறுதிப் போட்டிவரை முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிறுவர்களுடன் தெருவில் டென்னிஸ் விளையாடிய ஜோகோவிச்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.