2019ஆம் ஆண்டுக்கான மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பிரான்சின் மொனாக்கோவில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றுப் போட்டிகள் நேற்று நடைபெற்றன.
இதில், ஸ்பெயினின் ரஃபேல் நடால் பல்கேரியாவை சேர்ந்த டிமிட்ரோவ் (Dimitrov) உடன் மோதினார். இப்போட்டியில் சிறப்பாக ஆடிய நடால் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல் நடைபெற்ற மற்றொரு இரண்டாம் சுற்றுப் போட்டியில், செர்பியாவின் நட்சத்திர வீரர் ஜோகோவிச் 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்க வீரர் ஃப்ரிட்ஸை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இதைத்தொடர்ந்து, இன்று நடைபெறவிருக்கும் காலிறுதிப் போட்டியில், நடால், அர்ஜென்டினாவின் குய்டோ பேலாவை (Guido Pella) எதிர்கொள்ளவுள்ளார். அதேபோல், ஜோகோவிச், ரஷியாவின் டேனில் மெத்வதேவ் உடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.