சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இளம் வீரரான சிட்சிபாஸ் ரஷ்யாவின் மெத்வதேவை எதிர்த்து ஆடினார்.
இதற்கு முன்னதாக நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை சிட்சிபாஸ் வீழ்த்தியிருந்ததால், இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகளவு இருந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதியின் முதல் செட் ஆட்டத்தில் இரு வீரர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இருவரும் சரிக்கு சமமாக ஈடுகொடுத்து ஆடியதால். ஆட்டம் டை ப்ரேக்கர் வரை சென்றது. அதில் 7-5 என டை - ப்ரேக்கரில் வென்று முதல் செட்டை 7-6 என கைப்பற்றினார்.
இதனால் இரண்டாம் செட் ஆட்டம் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்தில் ஒவ்வொரு புள்ளிக்கும் பரபரப்பு பன்மடங்க் உயர்ந்தது. இறுதியாக மெத்வதேவ் 7-5 என இரண்டாவது செட்டைக் கைப்பற்றி, ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிக்கு தகுதிபெற்றார்.
இதற்கு முன்னதாக மெத்வதேவ் யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று நடாலிடன் தோல்வியடைந்தார். தற்போது ஷாங்காய் மாஸ்டர்ஸ் தொடரில் இறுதிக்கு முன்னேறியதால், நிச்சயம் பட்டத்தை கைப்பற்றுவார் என டென்னிஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்கலாமே: ’எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்’ ட்விட்டரை தெறிக்க விட்ட ஹர்பஜன் சிங்!